Monday, February 1, 2016

மொழியில் ஒளிரும் கணங்கள்- ஜேம்ஸ் சால்ட்டர் (James Salter) சிறுகதைகள்

பதாகை இதழில் வெளிவந்தது - http://padhaakai.com/2016/01/24/james-salter/
-----------
ஜேம்ஸ் சால்ட்டரின் (James Salter) 'Light Years' நாவலில் ஒரு பாத்திரம், “"One of the last great realizations is that life will not be what you dreamed." என்று எண்ணுவதை  அந்நாவலை மட்டுமல்லசால்ட்டரின் முழு புனைவுலகையும் இணைக்கும் பொதுச் சரடாகப் பார்க்கலாம்.    மேலும், தாம் தொடப்போகும் எல்லைகள் குறித்த கற்பனைகளுடன் பருவம் முதிர்ந்த (adult) வாழ்வைத்  தொடங்கிபின்பு ஒரு கட்டத்தில் தான் எங்கும் பயணம் செய்யாமல்  இன்னும் கரையிலேயே நின்று கொண்டிருப்பதை/ அல்லது திசை மாறி வேறு எல்லைகளை அடைந்ததை  உணர்பவர்கள் என பொதுப்படையாகவும்ஆண்-பெண் உறவில் தாங்கள் அடைந்துள்ளதாக நினைக்கும் நிறைவை விரைவில் இழந்துஅதை வேறிடத்தில்  தேடுதல் என்ற சுழலில் சிக்குபவர்கள்  என்று குறிப்பாகவும் சால்ட்டரின்  முழு சிறுகதைத் தொகுப்பை இரண்டு உட்கூறுகளாகப்  பிரிக்கலாம்.  

கிட்டத்தட்ட 60 ஆண்டுகால எழுத்துலக பயணத்தில் சால்ட்டருக்கு இலக்கிய நடையாளர்/ stylist என்பதே முதன்மை அடையாளமாக உள்ளது.  நிறைவின்மையினால் பீடிக்கப்பட்டாலும்    செயலூக்கம் குன்றாமல் வாழ விழைபவர்களின்சில நேரங்களில் மகிழ்ச்சியையும் பல நேரங்களில் இன்னும் புதிய துன்பங்களையும் இட்டுச் செல்லும் அந்த விழைவின் அன்றாட கணங்களை தன் எழுத்தில் சிறைப்பிடித்து உறையச் செய்து  "...give the ordinary its beautiful due" என்ற அப்டைக்கின் பிரசித்தமான மேற்கோளுக்கு சால்ட்டர்  நியாயம் செய்கிறார். இதை சால்ட்டரின் வார்த்தைகளிலேயே,  " There is no situation like the open road, and seeing things completely afresh. I’m used to traveling. It’s not a question of meeting or seeing new faces particularly, or hearing new stories, but of looking at life in a different way. It’s the curtain coming up on another act." என்று பிரயாணம் செய்வதைப் பற்றி அவர் குறிப்பிடுவதுடனும்  ஒப்பிடலாம். 

தன் நடையின்  நுட்பங்கள் மூலம் புதிய கோணத்தில் அன்றாட கணங்களை அணிசெய்கிறார் சால்ட்டர். "Foreign Shores" என்ற கதையில்இலையுதிர் காலத்தின் வருகைக்கான எதிர்பார்ப்பு  பற்றிய ஒரு விவரிப்பு "..left behind, a grasshopper, a veteran in dark green and yellow, limped along.The birds had torn off one of his legs"   
வெட்டுக்கிளி பற்றிய ஒரு காட்சித் துண்டு மட்டுமா? veteran, , limp ஆகிய சொற்கள் இவ்வரியில் அத்தியாவசியமாஆனால் அவ்வார்த்தைகளே  போரில் கால் இழந்த முதிய இராணுவ வீரரின் அந்திமக் காலத்தின் சித்திரமாகக் கூட இந்த வரியை உருவகிக்கச் செய்யக் கூடும் இல்லையா.   "Arlington" என்ற கதையில் ஆற்றின் அருகில் உள்ள தேவாலயத்தில் இராணுவ உயரதிகாரி ஒருவரின் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.  சடங்கின்போது இசைக்கப்படுவதை கல்லறைக்குச் செல்பவர்கள்  "... walked with many others, toward the end drawn by faint music as if coming from the ancient river itself, the last river, the boatman waiting" என்பதாக சால்ட்டர் பதிவு செய்யும்போதுவாசகன் ஒரு கணம் கிரேக்க புராண காலத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறான். ('Charon' என்பவன்  இறந்தவர்களின் ஆன்மாவைவாழும்/ இறந்தவர்களின் உலகங்களைப் பிரிக்கும் ஆறுகளைக் கடக்க உதவும் படகோட்டி என்பது கிரேக்க தொன்மம் ). இந்த இரண்டு விவரணைகளிலும் சால்ட்டர் அன்றாடத்தின் எல்லைகளை மீறவில்லைஅதாவது விவரணைகள்   புறச் சூழலை  யதார்த்தமாகவே வர்ணிப்பதாக உள்ளனஆனால் அவற்றை நாம் பார்க்கும் விதத்தைஅவற்றில் நாம் காண்பதை மட்டும் சற்றே மாற்றி அமைக்கும்போதுநாம் அதுவரை கவனத்தில் கொள்ளாத  திரைச்சீலை விலகி புதிய  பிம்பம் வாசகனுக்கு புலப்படுகிறது. 

ஒளிஅதில் துலக்கமாகும்   பிம்பங்கள் இவர் எழுத்தில் எங்கும் பரவி இருக்கின்றன. அந்தி மாலையில் உயர்ந்த கட்டிடத்திலிருந்து பார்க்கும்போது தென்படும் - சாலைகளில் செல்லும் வாகனங்களில்வீடுகளில்கடைகள்/அலுவலகங்களில் -ஒரே நேரத்தில்/ அடுத்தடுத்து செயலுக்கு வரும் செயற்கை ஒளிவீடுகளை நிறைத்திருக்கும் விளக்குகள்  இந்தக் கதைகளில்  இருந்தாலும்சால்ட்டரின் அகத்தில் நிறைந்திருப்பது வெய்யோனின் தூய ஒளியே என்பதற்குச் சான்றாக வாசகனையும் அவ்வொளியை  ஆசை தீரப் பருகச் செய்கிறார்.  முன்காலையின் வெளிச்சம் ஒரு வீட்டின்மேல் "In earliest morning,......The shadow of a tall elm beside it was traced on it as finely as if drawn by a pencil" ('Last Night') படர்வதை விவரிப்பதில் - The shadow of a tall elm beside it was traced on it என்பதுடன்மரத்தின் நிழல் வீட்டின் மேல் படரும் பிம்பத்துடன்இந்த வரியை சால்ட்டர் முடித்திருக்கக்கூடும்,  ஆனால் அதை  as finely as if drawn by a pencil என்று அவர் அதற்கு தரும் அழுத்தமே  இதில் முன்காலையின் ஒளியின் அடர்த்தியை உணர்த்துவதோடுஅந்தக் கணத்திற்கு மிகப் பொருத்தமாகவும் உள்ளது. முன்காலையின் ஒளி இப்படியென்றால்பின்மதிய/ முன்னந்தியின்  ஒளி "It was still light outside, the pure full light before evening, the sun in a thousand windows facing the park"  என எங்கும் செந்தழலாக படர்ந்திருக்கும் அக்கணத்தில் மூழ்கவே  வாசகன் விரும்புவான்.

புறச் சூழலை மட்டுமின்றி அகத்தின் எண்ணங்களையும் நுட்பமாக வெளிக்கொணர்கிறார் சால்ட்டர். பாலுறவு பற்றிய விவரணைகளை விரைவாக கடந்து செல்லும் சால்ட்டர்அதன் முதல் படியான பாலியல் விழைவுக்கும்பாலுறவுக்கு பிறகான கணங்களும் அதிக முக்கியத்துவம் தந்துபாத்திரங்களின் உரையாடல்கள்மௌனங்கள்உடலசைவுகள்எண்ணவோட்டங்கள் மூலம் வாசகனுக்கு துல்லியமாகக் கடத்துகிறார்.  'Charisma' என்ற கதையில்விருந்தின் போது , 
79 வயதான லூசனைப் பற்றி இரு மணமானப் பெண்கள் (அவர் வயதில் பாதி கூட அவர்களுக்கு இருக்காது என்று யூகிக்கலாம்) பேசும் 

"..Did he look old?"
"Yes,  but you know, not that kind of old."
"He's had tons of affairs, hasn't he? Fathered children left and right."
"Is that true?"
"I heard that one of his girlfriends was fourteen years old. Her brother tried to kill him".
"Fourteen, that's a little too much.That's still a child"
"I wonder how he would have met her".
 "Probably the daughter of a friend. He wanted her to model. And it took a long time and he was very attentive"
...
"How does he do it all?"
...
உரையாடலில்அவன் செயல்கள் குறித்து ஆர்வம்கொஞ்சம் கிசு கிசு,   மென்மையான கண்டனம்  ஆகியவை மேலோட்டமாக  வெளிப்பட்டாலும் , உண்மையில் அவன் பால் அவ்விரு பெண்களும் பாலியல் ரீதியாகக்  கிளர்ந்திருக்கிரார்கள்அதை வெளிக்காட்டாமல் , தாங்கள் உண்மையில் சொல்ல எண்ணுவதை நேரடியாகச்  சொல்லாமல்சுற்றி வளைத்து பேசுகிறார்கள்   என்பதை வாசகன் உணர முடியும். எனவே உரையாடலின் இறுதியில் 

"I'd fuck him though," she said.
"You would?"
"In a minute."
"I would, too"

என்று அவர்கள் சொல்வது எதிர்பார்த்த ஒன்றுதான். பாலியல் கிளர்ச்சியின் வெளிப்பாடுஅதன் எரோடிக் தன்மைமின்னோட்டமாக இவ்வுரையாடலின் முதல் பகுதி போல் நுட்பமாகவோ அல்லது அதன் இறுதிப் பகுதி போல் நேரடியாகவோ சால்ட்டரின் கதைகளில் ஊடுருவி உள்ளது. 


"...someone who likes to rub words in his hand, to turn them around and feel them, to wonder if that really is the best word possible...." என்று ஒரு பேட்டியில் தன் எழுத்து முறை பற்றி சால்ட்டர் சொல்கிறார். வார்த்தைகளை கவனமாகத் தேர்ந்தெடுத்து சொல்லமைப்பவர் அவர் என்பதை 
"Outside, in the ordinary daylight, were the trees along the side of the property, the roof of a house, the lawn, some scattered toys. It was a landscape that seemed ominous, too idyllic, too still" ('Foreign Shores'). 
என்ற பத்தியில்  பார்க்கலாம். ஒரு தெருவின் வீடுகள் அமைதியாக உள்ள ஒரு கணத்தின் சாதாரணச் சித்திரம்தான் இது. ஆனால்  இவ்வரி  வாசகன் மனதில் தோற்றுவிக்கும் பிம்பத்திற்கும், "in the ordinary daylight," என்பதை நீக்கி விட்டு படித்தால் (அதை நீக்கினாலும் அவ்வரி முழுமையானதாகவே இருக்கும்) தோன்றும் பிம்பத்திற்கும்  உள்ள வேறுபாட்டை உணரும் வாசகன் சால்ட்டரின் அழகியலை நெருங்குகிறான்.  'Last Night' கதையில் நோயுற்றிருக்கும் பாத்திரத்தின் நிலையை "She had a face now that was for the afterlife and those she would meet there"  என்று சால்ட்டர் குறிப்பிடுவதில்  'afterlife' என்ற வார்த்தையின் முக்கியத்துவம் என்ன?  நோயின் தீவிரத்தை உணர்த்த பல வார்த்தைகள் இருக்க இந்த  வார்த்தை வாசகனின் மனதில் அப்பாத்திரம்/ அவரின் நோய்  குறித்த சித்திரத்தை எந்த வகையில் உருவாக்குகிறது என்று யோசித்தால் அப்பாத்திரம் தன் இறுதிப் பயணத்தை தொடங்கியுள்ளதை இவ்வார்த்தை அளவிற்கு துல்லியாக உணர்த்துவது கடினம் என்று  தெரிய வரும்.  


ஆனால் இவ்வழகியலை மறுதலிக்கும் விதமாக , தன் இறுதி நாவல் 'All that is"  குறித்த ஒரு பேட்டியில் "I was constantly hearing people talking about their favourite passages, a sentence they’d underlined 10 times. I don’t know that that’s what you read a book for. I began to feel it was a fault. I got tired of it." என்று அவர் சொல்கிறார்.  60 ஆண்டுகால எழுத்துப் பயணத்தில் தன்னைத் தானே கவனித்துக் கொண்டிருந்தவர் என்பதும் , இறுதி வரை தன்னைப்  புதுப்பிக்க நினைத்தவர்  என்றும் அவரைக் குறித்து புரிந்து கொள்ள உதவுகிறது. 

ஒரு சில வரிகளில்அதுவரை கதையின் மையம் இது தான் என்று எண்ணியிருந்த வாசகனின்  கோணத்தை  மாற்றக் கூடியவர் சால்ட்டர். 'Akhnilio' கதை ஃபென்(Fenn) அதிகாலை 3 மூன்று மணியளவில் விழித்துக் கொள்வதுடன் ஆரம்பிக்கிறது. ஏதோ ஓசை அவனை அழைப்பது போல அவன் உணரநிலைகொள்ளாமல் அதைத் தேடி  வீட்டை விட்டு வெளியேறுகிறான். கதையின் போக்கில் அவன் வாழ்க்கை குறித்து நாம் அறியவருவது , அவன் கேட்கும் ஓசை ('It seemed he was the only listener to an infinite sea of cries'அவனுடைய உளமயக்கா  என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. அவனுடைய மனகொந்தளிப்பைப் பின் தொடரும் சால்ட்டர்அவன் வீதியெங்கும் அலைந்து திரிவதைச். சித்தரிக்கிறார்.   முழுதும் இருள் படர்ந்த வானம் சிறிது சிறிதாக மேகங்கள் கலைய தன்  அடர்த்தியை இழந்து விண்மீன்கள் மெல்லிதாக துலங்க ஆரம்பித்து , புலரியின் முதல்வெளிர் நிற ஒளி தோன்றும்போது  ஆயாசத்துடன் ஃபென் வீடு திரும்புகிறான். அகச் சூழலின் சித்தரிப்பு மட்டுமின்றிபுறச் சூழலின் சித்தரிப்பிலும் (The only galaxies were the insect voices that filled the night) சால்ட்டரின் உச்சங்களில் இக்கதை ஒன்று.   ஃபென்னை அவன் மனைவி எதிர்கொண்டு என்ன ஆயிற்று என்று கவலையுடன் கேட்கிறாள். ஆனால் அவளுடைய ஆதூரம் அவனுடைய கொந்தளிப்பை அதிகரித்துமீதமிருந்த சமநிலையையும் குலைத்து முற்றிலும் உடைந்து போகச்  செய்கிறது. இங்கு கதை முடிந்திருக்கக் கூடும். ஆனால் அவனுடைய சிறு வயதுப் பெண்ணின் "remembered from the years she was first in school when unhappiness filled the house and slamming doors and her father clumsy with affection came into their room at night to tell them stories and fell asleep at the front of her bed" எண்ணவோட்டங்களுடன் கதை முடியும் போது,   ஃபென்னிடம்  மட்டுமே குவிந்திருந்த   வாசகனின் மனம் அவனுடைய மனச் சிதைவு அவன் குடும்பத்தையும் பாதித்த/ பாதிக்கப் போகும் விதத்தையும் குறித்து கவலைப்பட ஆரம்பிக்கிறது. அவன் மனைவி மற்றும் குழந்தைகள் குறித்து முதல் முறையாக யோசிக்க ஆரம்பிக்கிறான் வாசகன். தனிநபர் மன உளைச்சலைப் பற்றிய கதையை   ஒரே ஒரு பத்தியில்சிதைவில் விளிம்பில் இருக்கும் குடும்பத்தின்  சித்திரமாக சால்ட்டர் மாற்றி  விடுகிறார்.   

 'Last Night' கதையில் வால்டர் (Walter), சுசான்னாவுடன்  (Susanna)   தன் வீட்டில் அமைதியின்றி அமர்ந்திருக்கிறார். அவர்கள் அவர் மனைவி மேரிட்டுக்காக  (Marit)  காத்திருக்கிறார்கள். மேரிட்டு அறைக்குள் நுழைந்ததுமே அவருக்கு ஏதோ உடம்பு சரியில்லை என்று புலப்படுகிறது. "On a saucer in the refrigerator, the syringe lay" போன்ற இடங்களில்   அது இன்னும் துலக்கம் கொள்கிறது. மெதுவாக அவிழும் நிகழ்வுகள் வாசகன் மனதைக் கூர்மை கொள்ளச் செய்கின்றன. மூவரும் உணவகத்திற்குச் செல்கிறார்கள்வழக்கத்திற்கு மாறாக விலை உயர்ந்த மது அருந்துகிறார்கள்இயல்பாக இருக்கிறோம் என்று காட்ட  முயன்றாலும் சற்றே சங்கடமான உரையாடலே நிகழ்கிறது.  வீடு திரும்பியப் பின்  வால்டர் நடுக்கத்துடன் மேரிட்டுக்கு ஊசியை செலுத்துகிறார். இனி என்னஇவர்கள் வாழ்வின் இன்னொரு அடுக்கு இப்போது தெரிய வருகிறது. வால்டருக்கும்  
சுசான்னாவுக்கும் தொடர்பு உள்ளது. அதை  மேரிட் அறிந்திருந்தாளாஅதனால் தான் தன் இறுதி இரவன்று  சுசான்னாவை அழைத்தாளா என்ற கேள்விகள் எழுகின்றன. இந்தக் கேள்விகளுடன் கதையை முடிக்காமல்   சால்ட்டர் இன்னும்   விரிக்கிறார். அடுத்த நாள் காலையில் படுக்கையறையில் இருக்கும் . வால்டருக்கும்  சுசான்னாவுக்கும்
அங்கு வரும் மேரிட்டைப் பார்த்து அதிர்ச்சி ஏற்படுகிறது.  வால்டருக்கும்,   மேரிட்டுக்குமான உரையாடல் 
""Are you all right...
No, you must have done it wrong
....
I have to do it all over, Marit sobbed.
"I'm so sorry, he said.."   
வால்டர் முதலில் கேட்கும் அபத்தமானக் கேள்விஉயிர் தப்பியதை விடவும் சென்ற இரவு முயன்றதை மீண்டும் முயல வேண்டுமே  என்ற மேரிட்டின் சோகம்மீண்டும்  வால்டரின் அபத்தமான மன்னிப்புக் கேட்டல் என்பதாக நீள்கிறது. வால்டர் கேட்கும் மன்னிப்பு தன்னை சுசான்னாவுடன் மேரிட் கண்டுகொண்டதால் கூட இருக்கலாம் இல்லையா. ஒரு பெண்ணின் இறுதி இரவு என்று வாசகன் முதலில் எண்ணுவது போல் இல்லாமல்சில உறவுகளின் இறுதி இரவைப் பற்றியதாகக் கதை முடிகிறது.


  "Eyes of the stars" கதை கணவனை இழந்த 60 வயதான டெட்டியின் (Teddy), பழங்கால நினைவுகளோடு ஆரம்பிக்கிறது. பிறகு 40களில் உள்ளஎதிர்பாராமல் நடிக்க வாய்ப்பு கிடைத்து சிறிது புகழ் அடைந்துள்ள கெக் (Keck), தன் தொழிலின் அந்திமக் காலத்தில் (ஆனால் இன்னும் புகழோடு) இருக்கும்  நடிகை டெபோரா (Deborah) இருவரும் கதையில்  முன்னிறுத்தப்படுகிறார்கள். 
யார் இக்கதையின் மையம் என உறுதியாகச் சொல்ல முடியாதபடி குறுக்கு வெட்டாக பார்வைக் கோணங்கள் மாறுகின்றன. இருந்தும்
 டெட்டியின் கடந்தகாலம்தான்  கற்பனை கூடச் செய்திராத புகழை எப்படி எதிர்கொள்வது என்று குழம்பும் கெக் (டெபோராவுக்கு  தன்னிடம்  ஈர்ப்பு உள்ளதை உணர்ந்தாலும் அவனால் குடும்பத்தை நினைவிலின்று அகற்ற இயலவில்லை)தன் திரைப்பட வாழ்வு முடிவுக்கு வருவதை எரிச்சல் கலந்த எள்ளலுடன் கடந்து செல்ல நினைக்கும் (You men get all excited by young girls...You haven't met a real woman, that's the difference)   டெபோரா என மூன்று இழைகளும்  தனித்துவமான  மூன்று வெவ்வேறு மனவுலகுகளை உருவாக்குகின்றன. 

79 வயதான லூசன் (Lucien) பற்றி இரு பெண்கள் பேசிக்கொள்வதாக ஆரம்பிக்கும் 'Charisma', கதையை 
"Not far from there, amid the countless lights of other apartments at night, was the one that Leila Aaron shared with a roommate" 
 என்ற ஒற்றை வரியுடன்பால் (Paul) என்பவனுடனான லைலாவின்(Leila)  சந்திப்பு அவள் வாழ்வை எப்படி மாற்றுகிறது  என்ற இழைக்கு மிக இயல்பாக கொண்டு செல்வதோடுஅதனூடேயே பாலின் வாழ்வு பற்றி சில துளிகளையும் வாசகனுக்களிக்கிறார். கட்டற்ற பாலியல் விழைவு என்பது லூசனையும் பாலையும் இணைக்கும் புள்ளியாக இருக்கிறதுஆனால்  லைலாவின் கதையைச் சொல்லும்பாலின் மறைவுக்குப் பின் அவன் கல்லறையைத் தேடி கண்டுபிடிக்க முயன்று "..  it was just like him to have eluded me, in death as in life.." என்று தோல்வியுறும் கதைசொல்லி யார்லைலாவா அல்லது அவனுடைய பழைய காதலிகளில் ஒருவரா என்ற கேள்வி எழுந்தாலும்கதையின் மைய இழையிலும்/ பார்வைக் கோணத்திலும் ஏற்படும்  மாற்றங்கள்அவற்றில் உள்ள தெளிவின்மை வாசகனை அந்நியப்படுத்துவதில்லை. 


இந்தப் பாணியில்வாசகனுக்கான எந்த குறிப்புணர்த்தலும்சுட்டுதலும்  இல்லாமல்  காலத்தில்பல பாத்திரங்களின் கோணத்தில்,  முன்பின்னாகச் செல்லக் கூடிய கதைகள் தனித்தனி கணங்களின்  சிதறல்களாக தோற்றமளித்தாலும்அவற்றைச் சற்று கூர்ந்து கவனித்தால் இயல்பாக  இறுக்கிப் பூட்டிய தந்தி போல அமைந்து இனிய இசையை வாசகனுக்கு அளிக்கின்றன.


சால்ட்டர் பெண்களை உபாசனை செய்பவர் என்றும்அப்படி  அல்ல வெறும் இச்சைக்கான பொருளாகவே அவர் கதைகளின் பெண் பாத்திரங்கள் பார்க்கப்படுகிறார்கள் என்றும் இரு தரப்பிலும் ('devil's advocate') வாதிட முடியும். 'Comet' என்ற கதையில் ".. youth burning through her clothes" என்று ஒரு 22 வயது யுவதியின் வர்ணனையையும்"She was still young enough to be good looking, the final blaze of it.."   என்று இரண்டாம் திருமணம் செய்து கொள்ளும் 35 வயதிற்கு மேல் இருக்கும் என்று யூகிக்கக் கூடியப் பெண்ணின் சித்தரிப்பையும் எடுத்துக் கொள்வோம். இது ஒரு கதையின் துளி என்பதும்இவ்விரண்டு சித்தரிப்பிலும் உள்ள அழகியலும் அதில் உள்ள நுட்பமான வேறுபாடும் (young enough to be good lookingஒரு புறமிருக்கசால்ட்டரின் கதைகளில் உள்ள பெண்கள் இப்படித்தான் ஆண்களால் எந்தளவுக்கு விரும்பப்படுவார்கள் என்ற தராசில் எடை போடப்பட்டு வகைப்படுத்தப் படுகிறார்கள் என்று வாதிட முடியும். பெண்களை அடைவதையே நோக்கமாகக் கொண்ட ஆண்கள் இவர்களை வெறும் சதைப் பிண்டமாகவே பார்க்கிறார்கள்கசையடி தருவது போன்ற பாலியல் பிழற்வுச்  (fetish) செயல்களால் -அச்செயலுக்கு முற்றிலும் தயாராகாத - பெண்களை இழிவு செய்கிறார்கள். பிரிந்திருந்த மனைவியுடன் சேர்ந்த பின் தான் தொடர்பு வைத்திருந்தப் பெண்ணை எந்தத் தயக்கமும் இல்லாமல் ஆணால்  உதறித்தள்ள முடிகிறது ('Dusk'). மகனை விபத்தில் இழந்துகணவனும் பிரிந்து சென்ற பின்பற்றிக்கொள்ள கிடைத்த ஒரு உறவையும் இப்போது இழந்து,  வேட்டைக் காலத்தில் (open season) ஒரு நாளன்று சுடப்பட்ட வாத்துக்கள் குறித்து    " lay one of them, dark sodden breast, graceful neck still extended, great wings striving to beat, bloody sounds coming from the holes in its beak. " என்று அப்பெண் எண்ணுவது வாத்துக்களுக்கு மட்டுமில்லாது நிராதரவாக இருக்கும் அவளின் சூழலுக்கும் பொருந்தும்.   

ஆனால் இதற்கு எதிரான வாதத்திற்கான சான்றுகளையும் சால்ட்டரின் கதைகளில் இருந்தே கொடுக்க முடியும்.  இக்கதைகளில் பேராண்மை விழைவு (macho, hard boiled)  கொண்டவர்களாக மட்டுமே இல்லாமல்மென்னுணர்வு கொண்டவர்களாகவும் ஆண்கள் இருக்கிறார்கள். அதே 'Comet' கதையில்இளமையின் இறுதித் தழல்கள் சூழ இருக்கும் அப்பெண்ணை அவள் கணவன் "...could have licked her palms like a calf does salt"  என்ற சித்தரிப்பிலும், "Arlington" கதையில் திருமணம் மீறிய உறவில் ஈடுபடும் மனைவியைக் குறித்து "To put your hand on the small of her naked back was to have all you ever hoped to possess" என்றும்அவளின் நம்பிக்கை துரோகம் குறித்து "He was loyal to her. It was one-sided, but that was enough." என்றும் எண்ணுவதும்பெண்மைக்கு முன்னால் மண்டியிட்டுதலைவணங்கி நிற்கும் ஆணையே காட்டுகின்றன. ஆண்களின் கைக்கு சிக்காமல் எப்போதும் சற்று எட்டியே இருக்கும் தேவதைகள் போன்ற பெண்களும் இக்கதைகளில் உள்ளார்கள். 'My Lord You' கதையில் மணமானப் பெண் ,எழுத்தாளர் ஒருவரின் வீட்டினுள் நுழைகிறார். யாரும் இல்லாத வீட்டில் அறை அறையாகச்  செல்லும் அவர் அவ்வீட்டை தோட்டத்துடன் இணைக்கும் குளியலறைக்குள் நுழைகிறார். கண்ணாடியின் முன் நிற்கும் அவர், தன் மேலுடைகளை எந்த யோசனையோ/காரணமோ இல்லாமல் கழற்றுகிறார்.  கதைக்குத் தொடர்புடைய நிகழ்வு இல்லை என்றாலும் இது  உருவாக்கும் பெண்மையின் பிம்பம், கிளர்ச்சிக்கு மாறாக  மூச்சடைக்க வைக்கும் திகைப்பையும், சிறிது  அச்சத்தையும் ஒரு சேர உருவாக்கி அவரை அப்போது பார்ப்பவரை செயலற்றவராக ஆக்கக்கூடியது.  வெளியே எங்கும்  ஒளி சூழ்ந்த நிசப்தமாக இருக்க, அப்பெண் யாரும் அடையமுடியாத யட்சியைப் போல் அக்கணத்தில் அவ்வறையில்  தோற்றம் கொள்கிறார்.

'Palm Court' கதையில் வரும் ஆர்த்தர்(Arthur), நொரீனுடன்(Noreen) நெருங்கிப் பழகுகிறான். பிறகு அவள் தான் இன்னொருவனுடன் பழக ஆரம்பித்ததை சொல்லும் போது அதை ஏற்றுக் கொள்கிறான். ஓர் இரவு  அவன் இல்லத்திற்கு வரும் நொரீன் தான் திருமணம் செய்ய முடிவு செய்திருப்பதாகவும்அது குறித்து அவனுக்கு ஏதேனும் கருத்து உள்ளதா என்றும் கேட்கிறாள். அப்போதும் ஆர்த்தர்  எதுவும் சொல்வதில்லை (இதே போல் ஒரு நிகழ்வு 'The Remains of the Day' நாவலில் வருவதை இங்கு நினைவில் கொள்ளலாம்). பல்லாண்டுகள் கழித்து இப்போது விவாக ரத்தான நொரீன் மீண்டும் அவனை சந்திக்க வருகிறாள். அவள் அவனுடன் மீண்டும் உறவேற்படுத்திக்கொள்ள நினைக்கிறாள் என்று தெரிந்தும்தனக்கு இன்னொரு பெண்ணுடன் நிச்சயம் முடிந்துள்ளதாக பொய் சொல்கிறான். இதைக் கேட்டு தன் கைகளையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருக்கும் நொரீன் பிறகு அவனை நோக்கி  புன்னகைக்கிறாள். தன்னை அவள் எப்போதும் புரிந்து கொள்வாள்எனவே மன்னிக்கிறாள் என்று அவன் எண்ணுகிறான். நெகிழ்வான காட்சி.  அவளிடம் விடை பெற்று வருபவன்,   ஆர்த்தர்   ஏன் பொய் சொன்னான்?  வெளிக்காட்டாவிட்டாலும் அவள் மீது வஞ்சம் கொண்டிருந்தானா "He thought of the love that had filled the great central chamber of his life and how he would not meet anyone like that again" என அவன் இல்லத்திற்கு திரும்புகையில் யோசிப்பதில் இந்தக் கேள்விக்கான விடை இருக்ககூடும். நொரீன் குறித்த அவன் மனதில் உள்ள சித்திரத்தை பாழ்படுத்த விரும்பாமல் இருந்திருக்ககூடும்அதே நேரம் தான் இனி அடைய முடியாததின் துயரை எண்ணியே தன்  இல்லத்திற்கு செல்லும் வழியில்வீதிலேயே உடைந்து அழத் தொடங்குகிறான்.  கதை முடிகிறது. 

'Give' கதை கதைசொல்லியின் திருமண வாழ்க்கை பற்றிய சித்தரிப்போடு (ஒருவர் தன் துணையிடம் பிடிக்காத குணத்தைப் பற்றி சண்டையிடுவதற்கு பதிலாகஅதைத் என்னிடம் தந்து விடு எனக் கேட்டு , என அப்பழக்கத்தை விட்டொழிக்கும் விதத்தை கண்டுகொள்கிறார்கள்) அராஜக குணம் கொண்ட கலைஞன் என்ற வகை மாதிரி பாத்திரமான பில்லியுடனான (Billy)    அவனுடைய நட்பு பற்றியும் சொல்கிறது. பில்லி இவர்களுடன் தங்க வருகிறான். கதையின் போக்கு இவ்வாறு இருக்கும் என வாசகன் யூகிக்க ஆரம்பிக்கும் போதுகதைசொல்லிக்கும்பில்லிக்குமான தன் பால் உறவை தந்து/விட்டு விடுமாறு கதைசொல்லியின் மனைவி கண்ணீருடன் கேட்கிறார். கதைசொல்லி அதை மறுக்கஅப்படி எந்த உறவும் இல்லையென்றால் பில்லியை வீட்டை விட்டு அனுப்பி விட வேண்டும் என்று சொல்கிறாள். கதை சொல்லி இதை பில்லியுடன் கூறும் போது அவன் மனைவி பில்லியிடம் பேசவே விரும்பவில்லை என்று மிகைபடுத்திக் கூறுகிறான். பில்லி அவர்களை நீங்கிச் செல்கிறான். மனைவிக்கும்தன் முதற் காதலனுக்கும் இடையே சிக்கித் தவிக்கும்   கதைசொல்லி எடுத்திருக்கக் கூடிய எந்த முடிவும் அவனுக்கும்மனைவி/ நண்பன் இருவரில் ஒருவருக்கும் துயரத்தையே கொடுத்திருக்கக் கூடும். கதைசொல்லி ஏன் பில்லியிடம் பொய் சொல்லவேண்டும்அவனுக்கே அவ்வுறவு சலித்து விட்டதா என்ற சந்தேகம்  அவனைப் பிரிந்தப் பின் 
"I felt the injustice for a long time.. I followed him from afar, the way a woman does a man she was never able to marry." 
அவன் மருகும் போதுநீங்கி விடும். 

மிக மென்னுணர்ச்சி கொண்டவர்களாக இருக்கும் இக்கதையின் கதைசொல்லி மற்றும் ஆர்த்தரை('Palm Court')  மிக சோகையானவன் (wimp) என்றும் கூட ஒருவர் இரக்கமின்றி சொல்லக் கூடும். முதல் பார்வையில் ஹெமிங்வேயின் பாத்திரங்கள் போல் தோற்றமளிக்கும் சால்ட்டரின் பாத்திரங்கள்அவற்றிலிருந்து  நுட்பமாக வேறுபடும் இடம் இது என்று சொல்லலாம்.  ஆண்-பெண் உறவெனும் ஆடலில் ஒருவரையொருவர் காயப்படுத்திக்கொண்டே இருப்பதின் இரு பக்கங்களை உணர்த்துகின்றன எனவாறு இக்கதைககளை  புரிந்து கொள்ளலாம். 

பாலியல் விழைவுகள் பற்றிய இன்னொரு விபரீத பிழற்வையும் இவர் கதைகளில் காண முடிகிறது. "I want to be yours" என்று ஒரு மூன்று வயது பெண் குழந்தை தன் தந்தையிடம் சொல்வதாக வரும் - கதையின் ('Platinum') போக்கிற்கு நேரடி தொடர்பில்லாத- உடனடியாக கடந்து செல்லப் படும் இடம் வாசகனை உறைய வைக்கும்.  இதே போல் 'Bangkok' கதையில் குழந்தைகள் மீதான பாலியல் விழைவு குறித்தும், 'Foreign Shores' கதையில் குழந்தைகள் பாலியலுக்கு பயன்படுத்தப்படுவது குறித்தும், 'American Express' கதையில் 25-35 வயதில் இருக்கும் இளைஞன் பள்ளிச் சிறுமியை பாலுறவுக்காக வசப்படுத்துவது எனவும்  சில சுட்டல்கள் (விரிவான சித்தரிப்புக்கள் அல்ல) உள்ளன. "Men’s dream and ambition is to have women, as a cat’s is to catch birds, but this is something that must be restrained" 
என்று சால்ட்டர் ஒரு கட்டுரையில் சொன்னதாக மேற்கோள் காட்டப்படும் (மூலக் கட்டுரையின் சுட்டி இணையத்தில் கிடைப்பதில்லைகூற்றின் பின்புலத்தில்இக்கதைகளில் உள்ள   
பாலியல் விழைவுகளை வாசகன் ஆராயக் கூடும்.

".. a thirst rose in him, a desire to be recognized. He was walking for the hundredth time on streets which in no way acknowledged him,... 
என்ற 'Via Negativa' கதையின்  போராடும் எழுத்தாளன் நைலின்(Nile)  விழைவு சால்ட்டரின் புனைவுலகின் இன்னொரு பொது அம்சம். "There's no greatness without fame" என்று அவருடைய "Light Years" நாவலில் Viri சொல்வதும் , "All that is" நாவலில் Philip Bowman தேடுவதும் இந்த அங்கீகாரத்தையே. தன் காதலியின் வீட்டிற்குச் செல்லும் நைல் "Viking" பதிப்பகம் தன் எழுத்தில் ஆர்வம் காட்டியிருப்பதாக சொல்கிறான். காதலி அது குறித்து அதிகம் ஆர்வம் கொள்ளாமல்அதே நேரம் மறுதலிக்காமல்  இருப்பதிலிருந்து  இது அவன் தன்னையே ஏமாற்றிக்கொள்ளப் பயன்படுத்தும் யுத்தி என்றும்அவள் அதற்குப் பழகிதான் அதை நம்பாவிட்டாலும்  நைலுக்கு அதில் ஒரு மனநிறைவு கிடைத்தால் அதை ஏன் குலைக்க வேண்டும் என அமைதி காக்கிறாள் என்றும் யூகிக்க முடிகிறது. ஆனால் அந்த அமைதியே அவளுடைய எண்ணத்தை வெளிப்படுத்த நைல் மேலும் மேலும் பேசி அவளை நம்ப வைக்க முயன்றாலும்அவள் செயற்கையான ஆர்வத்தைக் காட்ட தயாராக இல்லை.  இது நைலை  நிலைகுலையச் செய்கிறது. அவள் வீட்டை விட்டு வெளியே சென்ற பின்பித்து நிலையில் வீட்டின் பொருட்களை நாசம் செய்து நைலும் வெளியேறுகிறான். இப்போது தெருக்களில் "They recognize me, he thought, they smell me in the dark like mares." என அவன் எண்ண ஓட்டமே மாறுகிறது. இதுவும் அவனுடைய கற்பனை தான். காதலி வீட்டை நாசம் செய்தது கீழ்மையான செயல்  தான் என்றாலும்கையறு நிலையின் வெளிப்பாடான அச்செயல் அவனுடைய  மனச் சோர்வுக்கு ஒரு தற்காலிக வடிகாலாக உள்ளது என்பதும் உண்மையே. 

"Lost Sons" கதையில்பல்லாண்டுகளுக்கு முன்  தான் இராணுவ பயிற்சி எடுத்த அணியின் உறுப்பினர் சந்திப்பிற்காக வரும் "Reemstma" மற்றவர்களால் நுட்பமாக - அவன் கேட்கும் கேள்விக்குப் மிகச் சுருக்கமான பதில்சில நேரத்தில் அதுவும் இல்லைஅவனுடைய தற்போதைய வாழ்க்கை சூழல் பற்றிய அக்கறையின்மை  -உதாசீனப்படுத்தப்படுகிறான். அவனுடைய இராணுவ வாழ்க்கை பற்றி அவன் மனைவியே கூட அதிகம் அறிந்திருக்கவில்லை என்றும்அவளுக்கு அதில் விருப்பமும் இல்லை என்றும் தெரியவருகிறது (எனவே அவள் இச்சந்திப்பிற்கு வரவில்லை). கடந்த காலத்தின் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளக் கூட யாருமில்லாத தனிமையில் உள்ள அவன் நிலைமை பரிதாபத்திற்குரியது. இப்போது அவன் ஓவியனாக உள்ளான் என்று தெரிந்தவுடன் அங்கு வந்துள்ள மற்ற ஆண்களின் மனைவிகள் அவனை வினோத ஜந்து போலப் பார்த்து  "Do you make a living out of it" என்று எங்கும் கலைஞர்களிடம் கேட்கப்படும் கேள்வியை அவனிடம் கேட்கிறார்கள். ஒரு பெண் அவனிடம் சற்றே அதிகம் கரிசனம் கட்டுவதாக என்னும் Reemstma அக்கரிசனம் விரிவது குறித்த கற்பனையில் ஈடுபடுகிறான். ஆனால் அவள்இவர்கள் அணியில் இப்போது புகழ் பெற்று இருக்கும் ஒருவனுடன் கூடுகிறாள் என்று சுட்டப்படுகிறதுஅதை  Reemstmaவும் உணர்கிறான். 

ஆணின் அங்கீகாரத்திற்கான வேட்கைக்குஅவன் அடைந்ததாக எண்ணும் தோல்விகளுக்கு வடிகாலாகபெண் (தன் கையாலாகாத்தனத்தை ஈடு செய்ய பெண்ணை அடைய நினைத்தல் / துன்புறுத்துதல்) தான் இரையாக இருக்க வேண்டுமா என்ற கேள்வி இங்கு எழுவது நியாயமே.  அதே நேரம் அவள் விடைபெறும்போது  "It was very nice meeting you"  என்று சம்பிரதாயமாக சொல்லிச் சென்றதைக் கூட  எண்ணிப்பார்த்துஅவள் உணர்வுப்பூர்வமாகவே அப்படிச் சொல்லி இருப்பாள் என்று நினைத்து ஆறுதல் கொள்ள முயன்றுஅந்த ஒற்றை வரியில் நிறைவைத் தேடும் Reemstmaவின்  தனிமை கொடுமையானதே. 

சால்ட்டரின் கதைகளில் இருந்து வாசகன் பெற்றுக் கொள்வது என்ன?. 'Bangkok' கதையில் கரோல் (Carol) ஹாலிஸை (Hollis) பார்க்க வருகிறாள். பல காலத்திற்குப் பின் அச்சந்திப்பு நிகழ்கிறது என்றும்அவர்களுக்கிடையே நெருக்கமான உறவு இருந்து பிறகு பிரிந்தார்கள் என்றும் தெரிய வருகிறது. "She had been coming out of a restaurant one time, down some steps long after lunch in a silk dress that clung around the hips and the wind pulled against her legs. The afternoons, he thought for a moment." என்று ஹாலிஸ் நினைவுகூர்கிறார். உணவு விடுதியில் இருந்து கரோல் வரும் காட்சிக்குஎளிதில் கடந்து செல்லக் கூடிய பின்குறிப்பாக உள்ள  
"The afternoons, he thought for a moment." என்ற வரி ஏன்அவ்வரியில்  ஹாலிஸின் அகக்கண்ணில் மட்டும் விரியும் காட்சிகள்  - கண்ணாடி வழியே பொழியும் ஒளியினூடாக உணவுமூடிய அறைகளின் சாளரங்களின் திரைச்சீலையினூடாக வரும் மெல்லிய ஒளியினூடாக மஞ்சத்தில் பாலுறவிலோமெல்லிய குரலில் பேசுவதிலோ ஈடுபடுவது - என  எத்தனை மதியப் பொழுதுகள்அதை கவனிக்கத் தவறாத வாசகனின் அகத்திலும் தோன்றக்கூடும். தவற விட்டு விட்டஇனி எப்போதும் மீண்டும் கிடைக்காத பல பொழுதுகள்துயரையும்/ இன்பத்தையும் சம அளவில் தோற்றுவிக்கும் அவற்றின் கணங்களை  வாசகன் இந்தக் கதைகளில் இருந்து பெற்றுக் கொள்ளும் போதுதான் இழந்த இத்தகைய கணங்களையும் நினைவில் ஒளிரூட்டிக் கொள்வான்.  சால்ட்டரின் தலைப்புக்களின் வழி சொல்வதானால்,  ஒளியால் சூழப்பட்ட  ஆண்டுகளின் (Light Years), அவியாக அளிக்கப்படும் நாட்களின்  (Burning the days), எச்சமாக மிஞ்சுபவை (All that is) இக்கணங்கள் தான் இல்லையா.    

ஆசிரியர் குறிப்பு 

"James Salter is a magician" என்று ஜான் பான்வலும் (John Banville)  "It is an article of faith among readers of fiction that James Salter writes American sentences better than anyone writing today" என்று ரிச்சர்ட் போர்டும் (Richard Ford) சால்ட்டர் பற்றி சொல்கிறார்கள். சால்ட்டர் குறித்த பல புகழுரைகள் இருக்கஎழுத்தின் இரு வேறு  தளங்களில் இயங்கும் - பான்வல் போன்ற நடையாளரும்(stylist), போர்டு போன்ற கறைபடிந்த யதார்த்த (dirty realism) எழுத்தாளரும் -   ஒன்று போல்   சால்ட்டரை உயர்வாக மதிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் கொண்டதாகிறது. எனினும்அமெரிக்க விமானப் படையில் பணியாற்றி எழுத்துலகிற்கு வந்து   தன் 60 ஆண்டுகால எழுத்துப் பயணத்தில், 6 நாவல்கள், 2 சிறுகதை தொகுப்புக்கள் (20 சொச்சக் கதைகளே எழுதியுள்ளார்)நினைவுக் குறிப்பு நூல்மற்றும் பல அபுனைவு நூல்கள்திரைத்துறைப் பணி எனப் பலத் தளங்களில் இயங்கிய   அவர் மைய நீரோட்டத்தின் கவனத்தைப் பெறவில்லை. 'எழுத்தாளர்களின் எழுத்தாளர்என்பது போன்ற சொற்றொடர்களால் அவர் பாராட்டப்பட்டார்/விலக்கியும் வைக்கப்பட்டார். எழுத்தாளனின் வாழ்க்கையை அவன் புனைவில் தேடுவது அத்தியாவசியமானது இல்லையென்றாலும்அமரத்துவத்தை நாடும் அவர் பாத்திரங்களில் சால்ட்டரின் விழைவை உணர முடியும்  என்று தோன்றுகிறது. 
2013ல் வெளிவந்த அவருடைய இறுதி நாவல் 'All that is'  (அவருடைய மற்ற நூல்களுடன் ஒப்பீட்டளவில்) 
சற்றே பரவலான  வெகுஜன கவனத்தைப் - நீங்கள் இதுவரை அறிந்திராத மிகச் சிறந்த எழுத்தாளர் போன்ற பாராட்டுரைகள்- பெற்றது அவருக்கு சற்று ஆறுதல் அளித்திருக்கக் கூடும். ஆனால் அதையும் அவர் சற்று அவநம்பிக்கையுடனேயே பார்த்துள்ளார். 
"Apparently, I have an audience, and this book is awaited.. "
"We’ll see what the truth of that is. I don’t want to get too excited about it one way or another. You can work yourself into a state of nerves: What did they say? What have you heard?"  என்று அவர் சொல்வது  வெறும் அணிச் சொற்கள் அல்ல எனபதை  ஒரு கட்டத்தில், எழுதுவதற்கான நம்பிக்கையை இழந்து,  6-7 ஆண்டுகள் எதுவும் எழுதாமலேயே இருந்ததாக அவர் குறிப்பிடுவதுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் உணர முடியும். தான் எதிர்பார்த்திராத இந்த வரவேற்ப்பைப் பற்றி கூட  
"It’s gratifying but a little unreal at the same time,” he says. “The clothes feel a little loose on me, if you know what I mean.” என்று துயர அழகியலோடு சொல்ல அவரால் முடிகிறது. எனினும்அதில் முழுமையாகத் திளைக்க முடியாதவாறு 2015ல்  அவர் காலமானது நகைமுரண் என்றாலும்காலம் கடந்தாலும்  சிறிதளவேனும் தனக்கு அங்கீகாரம் கிடைப்பதை (அது கூட கிடைக்காத பலர் உள்ளனர் எனும் போது) அவர் கண்டார் எனபது சற்று ஆசுவாசமளிக்கிறது. 

Dusk and Other Stories, Last Night ன்ற அவருடைய இரு தொகுப்புக்களின் கதைகள் 'Collected Stories'  என்று  ஒரே நூலில் முழுமையாகத் தொகுக்கப்பட்டுள்ளன.


No comments:

Post a Comment